Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிவேகம்” தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் பலி……. ஓட்டுநர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் சிறுவன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சிறுவன் வாகனத்தின் டயரில் சிக்கியதால் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். பின் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை கண்டு கதறி அழுதனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வாகனத்தை இயக்கி வந்த டிரைவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 வயது சிறுவன் மீது பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |