Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இட்லி சாப்பிட மறுத்த 5வயது குழந்தை…. அடித்து கொலை செய்த கொடூர பெரியம்மா …!!

கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய மேரி வசித்து வருகிறார். 35வயதான ஆரோக்கிய மேரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் குழந்தை ரென்சி மேரியை சாப்பிடுவதற்காக ஆரோக்கியமேரி இட்லி கொடுத்துள்ளார். ஆனால் குழந்தை அந்த இட்லியை தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டு பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட சென்றது. இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி வீதியில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அடித்து தரதரவென இழுத்து வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டே ஆரோக்கியமேரி அந்த குழந்தையை அடித்து உதைத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை அலறி துடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரி கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை இட்லி சாப்பிட மறுத்தால்  அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |