Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி- மீட்புப்பணி தீவிரம் …!!

ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த  5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுமிக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வருகின்றது. சிறுமியை மீட்கபட்டதும் உடனே சிகிச்சை அளிக்க மருத்துவ அம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. அண்மையில் திருச்சி மணப்பாறையில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் இந்தியளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |