Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்… 25 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

கடந்த 2013-ஆம் ஆண்டு முசாபர்பூரைச் சேர்ந்த ஒருவன் அதே பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 5 வயது சிறுமி என்றும் பாராமல் வன்கொடுமை செய்த அந்த கொடூரன் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அவன் மீதான குற்றம்  நிரூபிக்கப்பட்டதால் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |