மொராக்கோ நாட்டில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மாட்டி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ நாட்டில் 105 அடி உள்ள ஆழ்துளை கிணற்றில் Rayan Awram என்ற 5 வயது சிறுவன் 5 தினங்களாக மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அச்சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. இதில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் அஞ்சல் செலுத்த அதிகமான மக்கள் கூடியிருந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
எனினும், மக்கள் இரங்கல் தெரிவிப்பதற்காக கடுமையான வெயிலில் இன்று அதிகாலை முதல் காத்திருந்துள்ளார்கள். அந்த கிராமத்தில் உள்ள 50 வயதுடைய நபர், “என் வாழ்நாளில் இந்த கிராமத்தில், எந்த இறுதிச் சடங்கிலும் இவ்வளவு அதிக கூட்டத்தை பார்த்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.