மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சியா என்ற 5 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் குமாரின் தாயாரான ஓமனா என்பவர் தனது பேத்தி லட்சியாவுடன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து ஐந்து வயதான லட்சியா மீது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த லட்சியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சியா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.