Categories
உலக செய்திகள்

5 வருட திட்டம்….! ”ஸ்கெட்ச் போட்டு களமிறங்கிய சீனா” அம்பலமான அதிர்ச்சி தகவல் …!!

ஐந்து வருடங்கள் திட்டமிட்டு சீனா டிஜிட்டல் கரன்சியை அமல் படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர்களை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகளும் சீனா திட்டமிட்டு தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீனாவின் திட்டம் குறித்து சர்ச்சை வலுப்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மூன்றாம் உலகப்போரை சீனா அணு ஆயுதமும் இல்லை வேறு எந்த ஆயுதமும் இல்லாமல் வைரஸ் கிருமி மூலமாக தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிக பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்ட அமெரிக்காவே இந்த தொற்றினால் 50,000 உயிரை பறிகொடுத்துவிட்டது. அதிலும் லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உலகில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து அதனை மண்டியிட வைப்பதோடு அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் மிகப்பெரிய வல்லரசாக சீனா தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவே வைரஸ் தொற்றை பரப்பி இருப்பதாக அமெரிக்க அரசியல் நிபுணர் கிரகாம் ஆலிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா  தொற்று மூலம் உலகப் பொருளாதாரத்தை கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இது வெறும் கணிப்பு மட்டுமல்ல இதற்கு சில உதாரணங்களும் இருக்கின்றன. உலக நாடுகள் முழுவதும் தொற்றினால் முடங்கியுள்ள இந்த சமயத்தில் சீனா நாட்டில் இருக்கும் சுற்றுலா தலங்களை திறந்துவிட்டுள்ளது. ஹோட்டல்கள் மால்கள் என அனைத்தும் திறக்கப்பட நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பிவிட்டது. அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்க தொடங்கிவிட்டன. 344 மில்லியன் டாலர்களை பொருளாதாரத்தில் இருந்து மீட்டெடுக்க சீன அரசு முதலீடு செய்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனாவால்  சீர்குலைந்த நிலையில் சீனா தங்கள் நாட்டில் டிஜிட்டல் கரன்சி எனும் டிஜிட்டல் பணத்தை அமல்படுத்தியுள்ளது. சீனாவின் மத்திய வங்கிகள் அனைத்தும் சேர்ந்து நேற்று டிஜிட்டல் பணத்தை அறிமுகம் செய்துள்ளது. அதோடு கொஞ்சம் கொஞ்சமாக இதன் அளவையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பிட் காயின்கள் அதிகம் இருக்கின்றது ஆனால் ஒரு நாட்டின் வங்கி மட்டுமே அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமல் படுத்தப் பட்டிருக்கும் இந்த டிஜிட்டல் கரன்சி வங்கி கணக்கில் சேர்க்கப்படாமல் இதற்கு என்று தனியாக வாலட் ஒன்று அளிக்கப்படுகிறது. அதில் மட்டுமே இந்த டிஜிட்டல் பணத்தை வைத்துக்கொள்ள முடியும் இந்த திட்டத்திற்கு டிஜிட்டல் கரன்சி எலக்ட்ரானிக் பெமென்ட் என்று பெயரிட்டுள்ளது. சீன பணமான யென்னின்  டிஜிட்டல் வெர்ஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது .இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சீனா 5 ஆண்டுகள் ரகசியமாக திட்டம்போட்டு தற்போது நிறைவேற்றி இருப்பதாக கூறுகிறார்கள்.

டிஜிட்டல் பணத்தை கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றது. சீனாவில் இருந்த அனைத்து பணங்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சீனா பழைய ரூபாய் நோட்டுகளை கிருமிநீக்கம் செய்திருந்தாலும்  பணம் மூலம் மீண்டும் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது. இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக சீனா டிஜிட்டல் கரன்சி பக்கம் திரும்பி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அதுமட்டுமன்றி மற்ற நாடுகளுடனும்  சீனா டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். உலகம் முழுவதிலும் தற்போது வர்த்தகத்திற்கு அமெரிக்க  டாலர்களை பயன்படுத்தப்படுகிறது. அதனை மாற்றி அமைக்கவே இத்தனை வருடங்கள் ரகசியமாக திட்டம் தீட்டி, கொரோனா  தொற்றினால் அமெரிக்க பாதிக்கப்பட்டுள்ள சமயத்தில் சீனா டிஜிட்டல் கரன்சி  வெளிக்கொண்டு வந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |