5 வயது சிறுவன் 228 ரூபாயுடன் தனக்கு லம்போகினி வாங்க பெற்றோரின் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலை விதிகளை மீறி அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் சென்று விரட்டிப் பிடித்து உள்ளனர். விரட்டி பிடிக்கப்பட்ட காரை திறந்து பார்த்த பொழுது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரை வேகமாக இயக்கி வந்தது 5 வயது சிறுவன் என்பதை தெரிந்து கொண்ட காவல் துறையினர் சிறுவனிடம் இது யாருடைய கார்? எங்கே செல்கிறாய்? என கேட்டுள்ளனர்.
அதற்கு சிறுவன் அளித்த பதில் மேலும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறுவன் இது தனது பெற்றோரின் கார் என்றும் தனக்காக லம்போகினி கார் வாங்க கலிபோர்னியாவிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் பதில் கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சிறுவனிடம் சோதனை நடத்தியதில் அவன் கையில் இந்திய மதிப்பெண் 228 ரூபாய் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. சிறுவன் வாங்க நினைத்த காரின் விலை ஒரு கோடியே 36 லட்சத்து 49 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோரை வரவழைத்து வழக்கு பதிந்து சிறுவனை வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.