Categories
உலக செய்திகள்

50க்கும் அதிகமான பொதுமக்கள் தலை துண்டிப்பு…. பயங்கரவாதிகளின் கோரச்செயல் …!!

பயங்கரவாத அமைப்பு ஒன்று கிராமக்களின் தலையை வெட்டி கொன்றுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாத குழு ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் கபோ டெல்கடோ என்ற மாகாணத்தின் நஞ்சபா கிராமத்தில் உள்ள ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தை தங்களுடைய கொலை செய்யும் களமாக மாற்றி, அதில் நஞ்சபா கிராம மக்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தலைகளை வெட்டிக் கொன்றுள்ளனர். மேலும் இந்த அட்டூழிய சம்பவத்தன்று இரவு அக்கிராம மக்களின் வீடுகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதுபோன்று தொடர் அட்டூழியங்களால் வருடங்கள் தோறும் இந்த மாகாணத்தில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்படுவார்கள்.

400,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை  இழந்து தெருக்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் எப்போதும் நடத்தும் தொடர் தாக்குதல்களை விட தற்போது நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் மோசமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் மூர்க்கத்தனமான செயலானது அக்கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த கோர தாக்குதல் சம்பவத்தை மொசாம்பிக் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

Categories

Tech |