Categories
தேசிய செய்திகள்

50பேர் கூட வரல…. இத வெச்சு என்ன செய்ய ? நாடு முழுவதும் உத்தரவு …!!

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது.

ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கீடு செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் 1728 ரயில் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6,000 ரயில் நிறுத்தங்களை கைவிட போவதாக ரயில்வே வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான வருவாய் அதாவது 50 பயணிகள் கூட ஏறி இறங்காத ரயில் நிலையங்களாக இவை கணக்கிடப்பட்டுள்ளது. HG3 என்ற வகை ரயில் நிலையங்களாக கணக்கிடப்பட்டு இதில் இனி ரயில்கள் நிற்காது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 544 ரயில் நிலையங்களில் இதுபோன்று மிக குறைந்த வருவாய் உள்ள ரயில் நிலையங்களாக 62 ரயில் நிலையங்கள் உள்ளது. எனவே தமிழகத்தில் இந்த 62 ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக பயணிகள் ரயில்கள் எல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்களாக  மாற்றப்பட்டுள்ளதால் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாத சூழ்நிலையில் மேலும் கூடுதலாக 62 ரயில் நிலையங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில்வே கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்படும் ஆனால் இந்த ஆண்டிற்கான ரயில்வே கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை எந்த அட்டவணை வெளியிடப்பட்ட உடன் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |