கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தினர் பழுதான மின் மோட்டாரை பழுது நீக்குவதற்காக எடுத்தனர். அதன் பிறகு ஆழ்துளை கிணறு மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்து சத்தம் போட்டது.
இதனை பார்த்த வாலிபர்களும், சிறுவர்களும் கயிறு கட்டி நாய் குட்டிகளை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக விட்டனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஆழ்துளை கிணற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.