Categories
தேசிய செய்திகள்

50 அடி உயரத்தில் இருந்து…. சுழன்று கொண்டே விழுந்த ராட்சச ராட்டினம்…. பதை பதைக்கும் காட்சி….!!!!

சுழன்று கொண்டே 50 அடி உயரத்திலிருந்து ராட்சச ராட்டினம் விழுந்த பதைப்பதைக்கும் காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது. பஞ்சாப் மாநிலம் மேகாலியில் கண்காட்சியின் போது சுமார் 50 பேருடன் சுற்றிக் கொண்டிருந்த ராட்சச ராட்டினம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம் செங்குத்தான அச்சியில் சுழன்று கொண்டு உயரத்திற்கு சென்று பின்னர் கீழே வரும். இந்த ராட்டினம் திடீரென உடைந்து அச்சில் இருந்து வேகமாக தரையில் கீழே விழுந்தது.

இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த பதைப்பதைக்கும் விபத்து தொடர்பான காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்று டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |