Categories
தேசிய செய்திகள்

50 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து…. 8 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!!

தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு சந்திர திருகோணமலை பகுதியில் பிரசித்தி பெற்ற தத்தாபீடம் பாபாபுடங்கிரி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்காக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் அவ்வழியே சென்ற தனியார் பேருந்து  கட்டுப்பாடை இழந்து  50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த சிறுவர் உட்பட 8 பேருக்கு ஒரு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |