Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி….. ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்த பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் 2 லட்ச ரூபாய் செலவு செய்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ-வுமான மதியழகன் என்பவர் நீர்வழி பாதைகளை சீரமைத்து தூர்வார நடவடிக்கை எடுத்தார்.

இதனால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் பெரிய ஏரி நிரம்பியதால் மதியழகன் எம்.எல்.ஏ மலர் தூவி விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கியுள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் அங்கு சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

Categories

Tech |