சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அருகே 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய ஏரி கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனை அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சௌமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்துறையினர் மதகு பகுதிக்கு சென்று மலர் தூவியுள்ளனர்.
இதனையடுத்து ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் அதனை உடனே தூர்வார உதவி கலெக்டர் சௌமியா வருவாய்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.