ஓசூர் அருகே அமைந்துள்ள மலை கிராமமான நாகமலை என்ற பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மின் விளக்குகள் கிடையாது. அதனால் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 50 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மின்விளக்குகள் தற்போது கிடைத்துள்ளது. சுமார் 56 குடும்பம் வாழும் இந்த கிராமத்தில் மின் விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் மாணவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தி வந்த நிலையில், மேக்னம் அரிமா சங்கம் சார்பில் இங்கு உள்ள வீடுகளுக்கு சோலார் மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories