உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண ஜோடியின் ஒருவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராக கட்டாயம் இருக்க வேண்டும். தேசிய ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.