நம்முடைய ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது மிக முக்கியம். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே சேமிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு சேமிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் விதமாகவும், வரும் காலங்களில் எந்த மாதிரியான சேமிப்பு மற்றும் தொழில்துறைகலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் விளக்கங்களை அளித்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் “50 ஆயிரம் சம்பாதிக்காவிட்டால் கல்யாணமே பண்ணாதீங்க” என்று பேசியிருக்கும் வீடியோ சிங்கிள்ஸ் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. குடும்ப பொருளாதாரம் பற்றி எப்போதும் பேசும் ஆனந்த் சீனிவாசன், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குறைந்தபட்சம் 50 ஆயிரம் சம்பாதிக்காவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என்று பேசியிருக்கிறார். இதனால் திருமணமாகாத சிங்கிள் பாய்ஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.