டெல்லியை சேர்ந்த பெண் காவல் அதிகாரி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் வசித்து வரும் 21 வயதான இளம்பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சிவில் பாதுகாப்பு துறையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பணிக்கு சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் மகளைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதையடுத்து காணாமல் போன ராபியா மிகவும் கொடூரமான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பல தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதேபோல் சமூக வலை தளங்கள் அனைத்திலும் #JusticeForSabiya என ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது. ராபியாவை கொன்றவர்களை விரைவில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். ராபியா கடந்த 26ஆம் தேதி மாலை அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டு பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.