நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண தள்ளுபடி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு, அரசு விடுமுறை நாளில் அளிக்கப்பட்ட 50% கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.