உலகம் முழுவதும் 53 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் 53 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் கணக்கின் தகவலும் லீக்காகி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள https://haveibeenpwned.com/உதவுகிறது. இந்த இணையத்தில் சென்று நமது ஈமெயில் அல்லது போன் நம்பரை அடித்தால் லீக்கான தகவலுடன் ஒப்பிட்டு நமக்கு சொல்லி விடும்.