Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

50 கோடி எண்கள் ஹேக் செய்யப்பட்டதா…? வாட்ஸ்அப் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்தது. உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளில் உள்ள 48.70 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக சைபர்நியூஸ் தெரிவித்திருந்த நிலையில், இதுபற்றி வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், சைபர்நியூஸில் வெளியான தகவல் ஆதாரமற்ற ஸ்கிரீன்ஷாட்களை அடிப்படையாகக் கொண்டது. வாட்ஸ்அப்பில் இருந்து டேட்டா திருடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உறுதி கூறியுள்ளார்.

Categories

Tech |