உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை அமெரிக்கா உலக நாடுகளுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 92 வளரும் நாடுகளுக்கு இதை விநியோகிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு முடிவுக்குள் 20 கோடி தடுப்பூசிகளும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் 30 கோடி தடுப்பூசிகளும் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதை இன்று நடைபெறும் ஜி 7 சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.