கோவையில் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல 50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு சிவகாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன் இவர் கடந்த மார்ச் முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்தால் தினமும் இரண்டரை சதவீதம் வட்டி அல்லது இரட்டிப்பு பணம் தருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை நம்பி பலரும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்படி லே-அவுட் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் 1,20,000 ரூபாயை கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்தார். ஆனால் முதலீட்டுக்கான வட்டி பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கேசவன் புகார் அளித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல பேரிடம் இருந்து 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளரான ரிதுவர்ணன் ஸ்ரீஹரி பாலமுருகன் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிதுவர்ணனை கைதி செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.