தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஹோட்டல்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுதாகர் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த சாம்பார், 3 கிலோ அழுகிய பழங்கள், 5 கிலோ கார வகைகள், 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விதிகளை மீறிய குற்றத்திற்காக 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.