அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய அரசாணையை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தது. அதற்கு எதிராக சில மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ” இந்த விவகாரம் தொடர்பாக கேரள மருத்துவர்கள் தாக்கல் செய்த மனு உடன் இந்த மனுவை இணைத்து விசாரிப்பதாக கூறி மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் தள்ளிவைத்துள்ளது.
அதுமட்டுமன்றி இந்த மனு தொடர்பாக விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.