சுங்கச்சாவடி பகுதியில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவு மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி பகுதியில் பழுதடைந்த சாலைகள் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரவாயல் வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட மாநில அரசுத்துறைகளில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், விருப்பப்படும் அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மதுரவாயல் முதல் வாலாஜா வரை சாலை முறையாக பராமரிப்பது இல்லை என்பதால் தாமாக முன்வந்து விசாரணை ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.