Categories
உலக செய்திகள்

50 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரள்….. படம் பிடித்த நாசா….!!!!!!!!

பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டமாகும். 50 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதை தொடர்ந்து உருவானதாகும். இது வேகசக்கரத்தின் தோற்றத்தை அளிக்கின்றது. மேலும் இது இரண்டு வளையங்களை கொண்டிருக்கிறது.

ஒரு பிரகாசமான உள்வளையம் மற்றும் வண்ணமயமான வெளிப்புற வளையம் இந்த இரண்டு வளையங்களில் ஏற்பட்ட மோதலின் கேலக்ஸி மையத்திலிருந்து வெளிப்புறமாக விண்மீன் கூட்டத்தை விரிவடைய செய்கின்றது. இதற்கு முன் ஹப்பில் டெலஸ்கோப் இந்த கேலக்ஸி படம் எடுத்ததை விட மிக துல்லியமாகவும் தெளிவாகவும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோ படம் எடுத்திருக்கின்றது. காட்வின் கேலக்ஸி பிரகாசமாக தெரியும் மையமானது மிகப்பெரிய அளவிலான இளம் நட்சத்திரக் கூட்டங்களின் இல்லமாக இருக்கிறது. வெளிப்புற வளையம் மோதலின் மையத்தில் இருந்து சுமார் 440 மில்லியன் வருடங்களாக விரிவடைந்து வருகின்றது.

அது விரிவடைந்து சுற்றியுள்ள வாயுவை தாக்கும் போது நட்சத்திரங்கள் உருவாகிறது காட்டுவீல் கேலக்ஸி ஆனது மோதுவதற்கு முன் பால்வழி போன்ற சாதாரண விண்மீன் மண்டலமாக இருக்கலாம் எனவும் எதிர்காலத்தில் அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பில் மாற்றம் தொடரும் எனவும் நாசா தெரிவித்திருக்கிறது. மேலும் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக ஜேம்ஸ் டெலஸ்கோப் எடுத்த புகைப்படங்களை வெளியிட இருப்பதாக நாசா கூறியுள்ளது.

Categories

Tech |