செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 142 அடி உயருவதற்கு காரணமாக இருந்தது முழுக்க முழுக்க அண்ணா திமுக. எம்முடைய தாய் புரட்சித்தலைவி அம்மாதான் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார்கள். அன்றைக்கு திமுக இதே மாதிரி 2006ல் பிப்ரவரி மாதம் 142 அடியாக முதற்கட்டமாக உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 27.2.2006ல் அன்றைக்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகுகிறது.
அணுகும்போது நமக்கு தேர்தல் நோட்டிபிகேஷன் வந்தது. எனவே நாம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை, அதற்கு அடுத்து வந்த திமுக அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. திரும்ப தன்னிச்சையாக கேரள அரசு என்ன செய்கிறது ? அதை நடைமுறைபடுத்த கூடாது என்ற அடிப்படையில் தனியாக ஒரு சட்டமன்ற கூட்டத்தை ஏற்பாடு பண்ணி எல்லா சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து 136 அடிக்கு ஏற்றக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்.
அதை எதிர்த்து திமுக ஆட்சியில் இருந்தவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஆனால் அம்மா தான் கண்டித்து மதுரையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 50 லட்சம் மக்கள் கலந்து கொண்டு மதுரையில் கடலே கிடையாது மக்கள் கடலில் அம்மா கலந்து கொண்டார்கள். அந்த போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக அன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக பல்வேறு இடையூறுகளை செய்தது. 18 மிரட்டல் கடிதம்….
ஒரு கடிதம் இங்க வந்தா போதும் மனித வெடிகுண்டாக மாறுவோம். நீங்கள் ஊருக்கு போக முடியாது என்று சொன்னார்கள், அப்படி இருந்தாலும் உயிரை துட்சம் என மதித்து அம்மா வந்தார்கள். 5 மாவட்ட மக்களுக்காக என் உயிர் போவதை பற்றி கவலை இல்லை என்று சொல்லி வீர பெண்மணியாக வந்து 2016 ல் ஆட்சிக்கு வருவேன்,
வந்தவுடன் 142 அடியாக முதற்கட்டமாக உயர்த்துவேன், அதற்கு அடுத்த கட்டமாக 152 அடி உயர்த்திக் காட்டுவேன் என்று சொன்னார்கள், உயர்த்திக் காட்டுனோம் மூன்று முறை 142 அடி உயர்ந்தது. அப்போது எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை இல்லை. இப்ப தான் அந்த மாதிரி பிரச்சனை வந்திருக்கிறது என தெரிவித்தார்.