சீட் கிடைக்காததால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது . மேலும் அவர் சீட் வாங்குவதற்காக அவர் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தாராம். பணம் கொடுத்தும் சீட் தராமல் ஏமாத்திட்டாங்களே என்பதுதான் இவரது கண்ணீரின் பின்னணிக் கதையாகும்.உ.பியில் தேர்தல் பிரச்சாரம் அனல் வீச ஆரம்பித்து விட்டது. கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்து விட்டன. ஆரம்பத்திலிருந்தே அமைதியாக இருந்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட தற்போது வேட்பாளர்களை முடிவு செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் அந்தக் கட்சியைசத் சேர்ந்த அர்ஷத் ராணா என்ற பிரமுகர் கட்சியில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று கூறி அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அர்ஷத், முசாபர்நகர் மாவட்டம் சர்த்வால் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தேர்தலில் போட்டியிட தனக்கு இடம் வேண்டும் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தனக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தொகுதி முழுவதும் விளம்பரம் செய்து போர்டெல்லாம் வைத்திருந்தாரம்.
எல்லாம் வீணாகி விட்டதே என்ற அதிர்ச்சியில் அவர் குழந்தை மாதிரி அழுதார். கட்டுப்படுத்த முடியாமல் தாரை தாரையாக கண்ணீர் விட்டபடி என்னை கேலிப் பொருளாக்கி விட்டனர். நான் எதிர்பார்க்கவே இல்லை. சீட் கொடுப்போம் என்றுதான் உறுதியாக கூறி வந்தனர். இதை நம்பித்தான் நான் விளம்பரம் செய்தேன். செலவழித்தேன். ரூ. 50,000 லட்சம் வரை சீட்டுக்காக செலவிட்டிருந்தேன். ஆனால் எல்லாம் போச்சு என்று கூறி அவர் கதறிக் கதறி அழுதார்.அர்ஷத் குழந்தை மாதிரி அழும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி பரவி வருகிறது.