திருமணமாகி 6 மாதங்களில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உரமாவு அருகே முனிரெட்டி லே-அவுட்டில் என்ற பகுதியில் வசித்து வருபவர் மிதுன் ரெட்டி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மிதுன் ரெட்டி கேட்ட வரதட்சணையை ஸ்ருதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த பிறகு சந்தோஷமாக இந்த தம்பதிகள் வாழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீதுன், ஸ்ருதியிடம் சொந்தமாக பேட்மிட்டன் மைதானம் அமைக்க உன் பெற்றோர் வீட்டில் இருந்து 50 லட்சம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு வா என்று கூறி கூறியுள்ளார். இதற்கு ஸ்ருதி மறுத்துள்ளார். இதனால் ஸ்ருதியை மிதுன் ரெட்டி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
அவர் மட்டுமல்லாமல் அவரது தாய் பாக்கியம்மாலும் அவரை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ருதி நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மிதுன் மற்றும் அவரது தாய் பாக்கியம் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ருதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மிதுனை கைதுசெய்தனர். தலைமறைவான பாக்கியம்மாவை வலைவீசி தேடிவருகின்றனர்.