1973 ஆம் வருடம் மார்ச் 27ஆம் தேதி 45 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தி காட்பாதர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த தகவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் புகழ்பெற்ற விட்டோ கார்லியோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மர்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் வழங்கப்பட்டது. ஆனால் அன்றைய விருது விழாவில் மர்லான் கலந்து கொள்ளவில்லை அதில் அவருக்கு பதிலாக பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சாஷின் லிட்டில் பெதர் என்ற பெண் மேடைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு நேராக முன்பு சென்று மர்லான் கடிதத்தை வாசிக்க தொடங்கியுள்ளார். திரைத்துறையில் அமெரிக்க பூர்வீக குடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதனால் மர்லான் இந்த விருதை வாங்க மறுத்துள்ளார் என கூறிவிட்டு சாஷீன் லிட்டில் பெதர் மேடையை விட்டு கீழே இறங்கியுள்ளார். மர்லான் கடிதமும் சாஷீன் அதை வாசித்ததும் ஆஸ்கார் அரங்கை அதிர செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அப்போது 26 வயதான சாஷீன் பல அவமதிப்புகளை எதிர் கொண்டுள்ளார். அன்றைய ஆஸ்கர் விழாவின் போது ஜான் வெய்ன் என்ற நடிகர் சாஷீன் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்துள்ளார்.
மேலும் அந்த விழாவில் பங்கேற்ற சிலர் சாஷீனை அவமதிக்கும் நோக்கத்தில் சைகைகளை செய்து அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்று சுமார் 50 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது 75 வயதாகும் சாஷீனிடம் ஆஸ்கார் குழு மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக சாஷீனிற்கு ஆஸ்கார் குழுவின் முன்னாள் தலைவர் டேவிட் ரூபின் எழுதியுள்ள கடிதத்தில் திரைத்துறையில் நீங்கள் இத்தனை வருட காலம் எதிர்கொண்ட சுமையையும் இழப்பையும் ஈடு செய்ய முடியாது.
உங்களது துணிச்சல் நீண்ட காலமாக அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் அதற்கான ஆழ்ந்த மன்னிப்பும் கேட்கின்றோம் எனக் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சாஷீன் ஆஸ்கார் குழு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மன்னிப்பு கேட்டிருக்கிறது. மேலும் பூர்வ குடி மக்களாகிய நாங்கள் மிகவும் பொறுமையானவர்கள். இந்த நாளை பார்க்கும் வரை நான் உயிரோடு இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்ச்சி நடைபெற்று 50 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அதற்குள் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது என்பதை பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.