அழியும் பட்டியலில் உள்ள அரிய வகை ராஜாளி கழுகுகள் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன.
மாயாறு பள்ளத்தாக்கில் குஞ்சுகளுடன் வலம்வரும் ராஜாளி கழுகுகளின் வாழ்விடம் குறித்த ரகசியம் நடிக்கிறது. செந்நிறமான கழுத்து, கூர்மையான பார்வை, கம்பீரமான நடை, கொத்திக் குதறும் அழகு இவையெல்லாம் ராஜாளி கழுகின் சிறப்புகள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட இவ்வகை கழுகுகள் காலப்போக்கில் அழியும் பட்டியலில் இடம் பெற்றன.
ஆசிய ராஜா கழுகுகள் என்று அழைக்கப்படும் இந்த அரிய வகை பறவை இனம் தற்போது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயாறு பள்ளத்தாக்கு சிறுமுகை தாளவாடி பகுதிகளில் தென்படுகின்றன. தமிழகத்தில் நான்கு வகை கழுகுகள் இருந்தாலும் வெண் முதுகு கழுகு, கருங் கழுத்து கழுகு, மஞ்சள் முக கழுகுகள் மாயார் பள்ளத்தாக்கை வாழ்விடமாக கொண்டவை.
ஆனால் மீண்டும் தலை எடுத்துள்ள ராஜாளி கழுகுகளின் வசிப்பிடங்கள் ரகசியமாக உள்ளன. அவற்றுள் கூடுகள் ஒன்று கூட கண்டுபிடிக்க முடியாதது ஆச்சரியத்தின் உச்சம். 40 முதல்70 ஆண்டுகள் உயிர்வாழும் கழுகின் உணவு இரண்டு விலங்குகள் மற்றும் கால்நடைகள்தான். அதனாலேயே அவற்றை பிணம் தின்னிக் கழுகுகள் என்று அழைக்கிறோம்.
நோய் தாக்கி இருப்பவற்றை தின்று அவற்றை அப்புறப்படுத்தி நோய்க் கிருமிகள் பரவாமல் கழுகுகள் தடுப்பதால் அவற்றைத் வனத்தின் துப்புறவு தோழன் என்று அழைக்கிறோம். அதில் முதன்மையான ராஜாளி கழுகுகள் இனம் மீண்டும் வேண்டும் பெருகி வருவதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.