Categories
தேசிய செய்திகள்

50 நிறுவனங்கள் பணத்தை ஏமாற்றி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பங்குச்சந்தையில் போலி முகவரிகளை கொடுத்து 50 நிறுவனங்கள் பணத்தை ஏமாற்றி விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்கு சந்தையில் போலி முகவரி கொடுத்து வர்த்தகம் செய்த அம்பது நிறுவனங்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ்  மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுகின்றனர். இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் கோடி கோடியாக பணத்தை சுருட்டிக்கொண்டு ஐம்பது நிறுவனங்கள் ஓட்டும் பிடித்துள்ளன.

மும்பயில் செயல்படும் பங்குசந்தையில் 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகின்றது. இங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 50 நிறுவனங்கள் போலி முகவரியை கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த அம்பது நிறுவனங்களுக்கும் தேசிய பங்குச் சந்தை சார்பில் விளக்கம் கேட்டு வர்த்தக அமைச்சகம் கீழ் அந்த நிறுவனங்கள் பதிவு செய்த முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |