தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்ரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்ததால் கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 இல் இருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.