கர்நாடாகாவின் இரண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாட்களில் 50 அடியை கடந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 11,443 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் சுமார் 1000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஓர் அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது என்றும் 75 நாட்களுக்கு பிறகு தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியை கடந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.