Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

1 கிலோ வெங்காயம் விலை ரூ50 …… சண்டை போட்டுகொண்டு வாங்கிய மக்கள்… !!!

திருவள்ளூரில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு கொடுத்ததால் மக்கள் சண்டைபோட்டுக் கொண்டு வாங்கினர்.

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைவதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகளவு சேர்த்து செய்யும் உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு எங்கிலும் வெங்காயத்தின்  விலை உச்சத்தில் இருக்கிறது.

1 கிலோ வெங்காயம் ரூ.50க்கு: முண்டியடித்து கொண்டு வாங்கிய பொதுமக்கள்

சென்னையின் புகழ்பெற்ற கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சின்ன  வெங்காயம்  200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை  விற்பனையாகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் நேதாஜி சாலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் ஒரு கிலோ வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததையடுத்து  பெரியவர் முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்மற்றும் வயதான முதியோர் என அனைத்து வகை மக்களும் கைப்பையை எடுத்துக்கொண்டு மல்லுக்கட்டி கொண்டு வெங்காயத்தை வாங்கி சென்றனர்.விற்பனை செய்ய தொடங்கிய அரைமணிநேரத்தில் மொத்த வெங்காயமும் விற்றுவிட்டது என்று வியாபாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |