Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 50 பேர் பலி …!!

இந்தியாவால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக்க அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 151 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக மகாராஷ்டிராவில் 335 பேருக்கும், கேரளாவில் 265 பேருக்கும், தமிழகத்தில் 234 பேருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |