Categories
சற்றுமுன்

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அதிரடி!

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்து துறையினரின் உடல் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். சென்னையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையை கணிசமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகர கூடுதல் மண்டல அலுவலர்களாக கார்த்திகேயன், பாஸ்கரன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |