பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சாலையோர வியாபாரிகள் தலா ரூ.10000 வரை கடன் பெறலாம்.
நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும். 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தியாவில் உள்ளனர். ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதி உதவி ஒருவருக்கு 10,000 ரூபாய் வரை கடன் வசதி மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனமாக கடனுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ரூ.6 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டுக்கடனில் மானியம் வழங்கும் திட்டம் மார்ச் 2021 வரை நீட்டிப்பு செய்வதாக அறியுள்ளார். ஏற்கனவே 3.3 லட்சம் நடுத்தர வருவாய் பிரிவினர் பயன் பெறும் நிலையில் இந்த அறிவிப்பினால் மேலும் 2.5 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். தொழில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை உருவாக்கலாம், அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சரியாக கடனை கட்டக்கூடிய சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.