நெதர்லாந்தில் கடந்த வாரம் மட்டும் சுமார் 50 சதவீதம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த வாரம் மட்டும் 50% ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று தேசிய பொது சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. ஒமிக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருவதால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டது. ஊரடங்கு மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றால் நாட்டின் சுகாதார நலன் காக்கப்படும் என்று அரசு கருதுகிறது.