திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 2,30,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் எம்எம் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது வடமதுரை பகுதியில் அக்னி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் இவர் கல்லூரி நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு வேலை சுமை காரணமாக கல்லூரியில் உள்ள அறையில் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு எம்எம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். காலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம் பக்கம் பக்கத்தினர். இதுகுறித்து கண்ணியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் சிசிடிவி கேமரா பொருத்த படாததால் எம்எம் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு திண்டுக்கல் மேற்கு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.