குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50% மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் அவர் தெரிவித்தாவது ” குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50% மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதிக வளர்ச்சி உள்ள இடத்தில் இருந்து பற்றாக்குறை இடங்களுக்கு பொருட்களை அனுப்பினால் 50% போக்குவரத்து மானியம் அளிக்கப்படும்என தெரிவித்துள்ளார்.
மேலும் எளிதில் அழியக்கூடிய காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு சலுகைகள் நீட்டிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதேபோல விலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்பு, வெங்காயம், உருளை விவசாயிகள் அதிக இருப்பு வைக்க வழிவகை செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.