Categories
மாநில செய்திகள்

இனி அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் வரும் வருடங்களில் புதிதாக 25 நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வளசரவாக்கம் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக கலர் சவுண்ட் ஸ்கேன் கருவிகளையும், 38 மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் கருவியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது. “கடந்த நிதிநிலை அறிக்கையில் 110 விதியின் கீழ் 2 புதிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி அறிவிப்பு எண் 61 கீழ் ரூபாய் 1.1௦ லட்சம் மதிப்பீட்டில்  தாய்மார்களின் பரிசோதனைக்காக 10 அலர்ட் சவுண்ட் ஸ்கேன் கருவிகள் திருவொற்றியூர், மணலி, புழல், ஆர்கே நகர், பாடி, அயனாவரம், வடபழனி, பேரூர், புளியந்தோப்பு ஆகிய சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தனியார் மருத்துவமனைகளில் உள்ள அதி நவீன வசதிகளை போல் அரசு மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.

மேலும் அறிவிப்பு என் 67 கீழ் ரூபாய் 56, 62,௦௦௦ மதிப்பீட்டில் 38 அரசு மருத்துவமனைகளுக்கு நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா காலங்களுக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி பொருத்தவரை 2021 முதல் 22 ஆம் ஆண்டு ரூபாய் 88 கோடியில் திட்டங்கள் செயல்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார மையங்களும், 25 புதிய நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்களும் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன், துணைமேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி மேயர் ஆர் ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |