தென் இந்திய சினிமாவில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குடும்பத்தை கவனிக்க வேண்டிய காரணத்தால் சீதா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001 ஆம் வருடம் விவகாரத்து செய்த சீதா, பின் திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத் திரையில் எண்ட்ரி கொடுத்து பல்வேறு தொடர்களில் நடித்தார்.
அதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சதீஷை தன் 43வது வயதில் சீதா 2வது திருமணம் செய்து கொண்டார். எனினும் இத்திருமணமும் தோல்வியில் முடிந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு சீதாவுக்கும், சதீஷுக்கும் விவாகரத்தானது. இப்போது 55 வயதை நெருங்கியுள்ள சீதா திரையுலகிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சீதா தன்னை பற்றிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். அண்மையில் சீதா மாடலாக உடையணிந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் இப்படி ஒரு அழகா..? சீதாவுக்குள் இப்படி ஒரு கான்பிடன்ஸா..? என பாராட்டி வருகின்றனர்.