Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளுக்குப் பின் 2 பழமையான பிரமீடுகள் பார்வைக்கு அனுமதி…!!!

எகிப்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் 2 பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்காக முதன் முதலாக திறக்கப்பட்டன.

கேரு தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான 2 பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதை சீரமைக்க அனுமதி கிடைத்தது.

பல ஆண்டுகளாக நடந்த சீரமைப்பு பணிகளுக்கு பின் பிரமிடுகள் இரண்டும்  மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அதில் குறுகிய நீண்ட படிக்கட்டுகள்,மரத்தாலான கலைப்பொருட்கள்,கல்லாலான சவப் பெட்டிகள், மற்றும் மம்மிகள் உள்ளிட்டவை காட்சிக்கு அனுமதிக்கப்படுகின்றன.மேலும் இப்பிரமீடு எகிப்தில் வாழ்ந்த தசூர் அரசு குடும்பத்தின் கல்லறையாக இருக்கலாம் என்றும்   அகழாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |