Categories
உலக செய்திகள்

புகைபிடித்துக்கொண்டே மாரத்தான் ஓட்டம்…. முதியவர் அசத்தல் சாதனை….!!!

சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி  போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் மட்டும் புகை பிடித்துக் கொண்டே ஓடினார். போட்டியின் தூரம் சுமார் 42 கிலோமீட்டர். அவர் 3 மணி நேரங்கள் 28 நிமிடங்கள்  மற்றும் 45 நொடிகளில் அந்த தூரத்தை கடந்தார். எனவே அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

இதற்கு முன்பு, கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய 2 வருடங்களிலும் மாரத்தான் போட்டியில் பங்கேற்று முழு தூரத்தையும் கடந்தார். அப்போதும் அவர் புகைபிடித்துக்கொண்டே ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |