Categories
சேலம் மாவட்ட செய்திகள்

500 கல்லறைகள் இடித்து அகற்றம்….. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 500 கல்லறைகள் இடித்து அகற்றப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் நகராட்சி 26-வது வார்டு சங்ககிரி மெயின் ரோட்டில் மயானம் இருக்கிறது. இங்குள்ள கல்லறைகளை எடுத்து அகற்றிவிட்டு பூங்காவுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைக்க 1 1/2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கல்லறைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

நேற்று மயானத்தில் பூங்காவுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தொடங்கி பொக்லைன் எந்திரம் மூலம் 500-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த பணியை நகராட்சி தலைவர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன் போன்ற அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். கல்லறைகள் இடித்து அகற்றப்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |