வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தேவர் குருபூஜை விழாவில் தங்களுடைய செல்வாக்கை காட்ட ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக தயாராகி விட்டது. அதாவது
தென் மாவட்டங்களில் தனக்கே ஆதரவு அதிகம் என்பதை காட்ட தேவர் ஜெயந்தியான இன்று OPS சுமார் 500+ கார்களில் தனது ஆதரவாளர்களுடன் பசும்பொன்னிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆர்பி. உதயகுமாரை வைத்து தென் மாவட்டங்களில் காய் நகர்த்த முயலும் EPSக்கு பதிலடி கொடுக்க இதுவே சரியான நேரம். எனவே, ஆதரவாளர்கள் அனைவரும் பசும்பொன்னிற்கு வரும்படி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று பசும்பொன் களைகட்டும்.