பப்புவா நியுகினியாவில் குட்டி விமானத்தில் 500 கிலோ கொகைன் போதைப் பொருள்களை கடத்திய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரத்தில் ஒரு குட்டி விமானம் பப்புவா நியுகினியாவில் இருந்து விமான ஓடுபாதையில் இல்லாமல் சாதாரண இடத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 500 கிலோவுக்கும் அதிக மதிப்புடைய கொகைன் போதைப் பொருள்களை கடத்திச் சென்றதாக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி மார்ஸ்பி துறைமுகத்தின் வடக்கில் பப்பா லியா என்ற இடத்திலிருந்து விமானம் டேக்ஆப் ஆன சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படும் செய்தியை அறிந்த ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியுகினியா காவல்துறையினர் விமானத்தை உடனடியாக தரையிறக்கியுள்ளனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்களுக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கொகைன் போதைப் பொருளின் அதிக அளவு எடை காரணமாக அந்த சிறிய விமானம் நிலை தடுமாறியது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.